சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
265   திருத்தணிகை திருப்புகழ் ( - வாரியார் # 292 )  

குவளைக் கணை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக்
     குடையிட் டகுறைப் ...... பிறையாலே
குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக்
     குயிலுக் குமினித் ...... தளராதே
இவளைத் துவளக் கலவிக் குநயத்
     திறுகத் தழுவிப் ...... புயமீதெ
இணையற் றழகிற் புனையக் கருணைக்
     கினிமைத் தொடையைத் ...... தரவேணும்
கவளக் கரடக் கரியெட் டலறக்
     கனகக் கிரியைப் ...... பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக் குருகிக்
     கலவிக் கணயத் ...... தெழுமார்பா
பவளத் தரளத் திரளக் குவைவெற்
     பவையொப் புவயற் ...... புறமீதே
பணிலத் திரள்மொய்த் ததிருத் தணிகைப்
     பதியிற் குமரப் ...... பெருமாளே.
Easy Version:
குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக் குடை இட்ட
குறைப் பிறையாலே
குறுகு உற்ற அலர்த் தெரிவைக்கு மொழிக் குயிலுக்கும்
இனித் தளராதே
இவளைத் துவளக் கலவிக்கு நயத்து இறுகத் தழுவிப்
புயம் மீதே இணை அற்ற அழகில் புனையக் கருணைக்கு
இனிமைத் தொடையைத் தர வேணும்
கவளக் கரடக் கரி எட்டு அலறக் கனகக் கிரியைப்
பொரும் வேலா
கருதிச் செயலைப் புயனுக்கு உருகிக் கலவிக்கு அணய
அத்து எழு மார்பா
பவளத் தரளத் திரளக் குவை வெற்பு அவை ஒப்பு வயல்
புறம் மீதே
பணிலத் திரள் மொய்த்த திருத்தணிகைப் பதியில் குமரப்
பெருமாளே.
Add (additional) Audio/Video Link

குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக் குடை இட்ட
குறைப் பிறையாலே
... (ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல
மலர் அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக
அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்),
குறுகு உற்ற அலர்த் தெரிவைக்கு மொழிக் குயிலுக்கும்
இனித் தளராதே
... பழிச்சொல் பேசி நெருங்கிவரும்
மங்கையர்க்கும், இனிய குரலுடன் கூவும் குயிலுக்கும் இனிமேல்
தளராதவாறு,
இவளைத் துவளக் கலவிக்கு நயத்து இறுகத் தழுவிப்
புயம் மீதே இணை அற்ற அழகில் புனையக் கருணைக்கு
இனிமைத் தொடையைத் தர வேணும்
... (உன் மேல் காதல்
கொண்ட) இந்தப் பெண்ணை துவள்கின்ற கூடல் இன்பத்துக்கு
விரும்பி அழுத்தமாகத் தழுவி, உன் தோள்களின் மேல் விளங்கும்
இனிமையான (கடப்ப) மாலையை ஒப்புதல் இல்லாத அழகுடன்
இவள் அணிந்து கொள்ள, கருணையுடன் நீ தந்தருள வேண்டும்.
கவளக் கரடக் கரி எட்டு அலறக் கனகக் கிரியைப்
பொரும் வேலா
... உணவு உண்டை உண்பனவும், மதம் பாயும்
சுவட்டை தாடையில் கொண்டனவுமான யானைகள் எட்டும்
(அஷ்ட திக்கஜங்களும்) அலறிப் பயப்பட, பொன் மலையாகிய
கிரெளஞ்சத்துடன் போர் செய்த வேலனே,
கருதிச் செயலைப் புயனுக்கு உருகிக் கலவிக்கு அணய
அத்து எழு மார்பா
... அசோக மலர்க் கணையைத் தோளில்
ஏந்திய மன்மதனின் வேண்டுமென்றே அம்பெய்த செயலால்
(வள்ளியைத் தழுவ) மனம் உருகிச் சேருதற்கு விரும்பி
எழுகின்ற மார்பனே.
பவளத் தரளத் திரளக் குவை வெற்பு அவை ஒப்பு வயல்
புறம் மீதே
... பவளம், முத்து இவை திரண்டுள்ள குவியல்கள்
மலை போல் கிடக்கும் வயற் புறங்களின் மேல்
பணிலத் திரள் மொய்த்த திருத்தணிகைப் பதியில் குமரப்
பெருமாளே.
... சங்கின் கூட்டங்கள் நிறைந்த திருத்தணிகை
என்னும் தலத்தில் (வீற்றிருக்கும்) குமரப் பெருமாளே.

Similar songs:

105 - அணிபட்டு அணுகி (பழநி)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

118 - இரு செப்பென (பழநி)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

164 - தகைமைத் தனியில் (பழநி)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

177 - புடைசெப் பென (பழநி)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

239 - அமைவுற்று அடைய (திருத்தணிகை)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

265 - குவளைக் கணை (திருத்தணிகை)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

285 - பொரியப் பொரிய (திருத்தணிகை)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

565 - கயலைச் சருவி (இரத்னகிரி)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

792 - அனல் அப்பு அரி (திருவிடைக்கழி)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

831 - உரமுற் றிரு (எட்டிகுடி)

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

Songs from this thalam திருத்தணிகை

831 - உரமுற் றிரு

832 - ஓங்கும் ஐம்புல

833 - கடல் ஒத்த விடம்

834 - மைக்குழல் ஒத்த

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song